×

திமுக ஆட்சிக்கு வந்தால் குண்டாறு அணை திட்டம் செயல்படுத்தப்படும்

ராமநாதபுரம், நவ.28: ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். தொகுதி பொறுப்பாளர்கள் திருக்குவளை மேகநாதன், கழுகுமலை சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர்கள் தங்கவேலன், சத்தியமூர்த்தி, முன்னாள் எம்பி பவானி ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏக்கள் முருகவேல், திசைவீரன் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி பேசுகையில், திமுக ஆட்சியில் தான் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெறுவதுதான் நோக்கம். திமுக ஆட்சிக்கு வந்தால் ராமநாதபுரம் குண்டாறு அணை திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும். மத்திய அரசின் கொத்தடிமையாக தமிழக அரசு  நடந்து கொண்டிருக்கிறது.

பாஜக தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது. 10 கார்பரேட் கம்பெனிக்காகத்தான் மோடி அரசு உள்ளது. ஏழைகளுக்கு இல்லை என்றார். கூட்டத்தில முன்னாள் மாவட்ட செயலாளர் திவாகரன், மாவட்ட துணைச்செயலாளர் கருப்பையா, பெருநாளி போஸ், அவைத்தலைவர் தீனதயாளன், நகர் செயலாளர் கார்மேகம் மற்றும் மாவட்ட நகர அணிகளின் அமைப்பாளர்கள், நகர் ஒன்றிய போரூராட்சி கிளைக் கழக நிர்வாகிகள் பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் நன்றி கூறினார்.

Tags : DMK ,Kundar Dam ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்